
கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உடல்நிலையில் ஏற்பட்டபின்னடைவு காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்டபின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்ததாகத் தகவல்வெளியாகி உள்ளது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரியாவிற்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)