footbaal player Priya issue  “Strict action will be taken” – Minister Shekharbabu

Advertisment

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக நவ. 8-ம்தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.பிரியா உயிரிழந்தது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தஅமைச்சர் சேகர்பாபு, “வீராங்கனை பிரியாவின் தந்தை கொடுத்த புகாரில் முதல்வர் உத்தரவின் படி தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்துள்ளார்கள். தொடர்ந்து அதைப் பற்றி விசாரித்து, தவறு இருக்கும் பட்சத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பிரியாவினை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு முதல்வர் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பார்” எனக் கூறினார்.