Advertisment

காவலர் தாக்கியதில் கால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு

 Foot taxi driver Lose their live in police attack

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தாக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடந்த 21 ஆம் தேதி சென்னை மதுரவாயல் பகுதியில் பெண் தோழி ஒருவருடன் சர்வீஸ் சாலையில் நின்று இரவு நேரத்தில் ராஜ்குமார் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ரிஸ்வான் என்ற தலைமை காவலர் விசாரித்துள்ளார். இதில் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு தலைமைக்காவலர் ரிஷ்வானுக்கும் வாக்குவதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

தொடர்ந்து ராஜ்குமாரை காவலர் தாக்கியுள்ளார். இதில் தாக்குதலுக்கு உள்ளான ராஜ்குமார் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து பெண்தோழி நண்பர்களுக்கு தகவல்கொடுத்த நிலையில் ஓட்டுநர் ராஜ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மதுரவாயல் காவல்நிலைய உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் காவலர் ரிஸ்வான் தாக்கியதில் ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழக்கும் வகையில் தாக்குதல் நடத்திய ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ரிஸ்வனுக்கு பூவிருந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்த நிலையில், தற்போது அவரைசஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chennai police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe