கெட்டுப்போன ஆட்டுக்கால்களை விற்பனை செய்த இறைச்சிக் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் இறைச்சிக் கடையின் குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று (02.09.2024) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன ஆயிரக்கணக்கான ஆட்டுக்கால்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ ஆட்டுக் கால்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து அழிக்கப்பட உள்ளன. மேலும் கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.