/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sda.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தமிழகத்தில்கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் இருந்து வருகின்றது. மக்களின் வாழ்வாதாரம் கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு இலவச அரிசி வழங்கி வருகின்றது. இதற்கிடையே தற்போது நவம்பர் மாதம் வரையில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனா தொடர்பாக ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்றும், தேவையான அளவு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)