
தூத்துக்குடியில்சிக்கன்கிரேவிசாப்பிட்டுவிட்டுகுளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்டஉணவுப்பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தலாரிஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகம் அவரது மகள்தர்ஷினியும்அருகே உள்ள ஹோட்டலில்சிக்கன்கிரேவிவாங்கிவந்துள்ளனர்.வீட்டில் தயாரித்து வைத்திருந்த உணவுடன் சேர்த்துசிக்கன்கிரேவிசாப்பிட்ட இருவரும் அதன் பிறகு வயிறு எரிச்சல் இருந்தால்பக்கத்துகடையில்குளிர்பானம் வாங்கிஅருந்தியதாகக்கூறப்படுகிறது. குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே தாய் கற்பகம், மகள்தர்ஷினிஆகிய இருவருக்கும் வாந்தி மற்றும்மூச்சுத்திணறல்ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோவில்பட்டி அரசுமருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை மற்றும் மருந்துநிர்வாகத்துறைஅலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் குளிர்பான கடையில்ஆய்வு நடத்தினர். இதுபோன்ற புகார்கள் வரும்போது மட்டுமேஉணவுபாதுகாப்புதுறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர் என அப்பகுதி மக்கள்குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் உணவின் குறைபாடு நேரடி காரணம் இல்லை.பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்க முகாந்திரம் உள்ளது என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி சென்னைபெசன்ட்நகரைச் சேர்ந்த சதீஷ், காயத்திரி தம்பதியினரின் இளையமகள் தாரணி வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும்ரஸ்னாவாங்கி குடித்த நிலையில் குளிர்பானத்தைச் சிறுமி குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டதோடு மூக்கில் சிவப்பு நிற சளி வந்ததைக் கண்டு சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மயங்கி விழுந்த சிறுமியின் உடல் நீல நிறத்தில் மாற உடனே, அருகிலுள்ளமருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்புசென்னைபுதுவண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த குமார் என்பவரின் 6 வயது மகன்லக்ஷ்மன்சாய். அவரது வீட்டிற்கு அருகே உள்ள கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்த நிலையில் குளிர்பானத்தைக் குடித்த சிறுவன் சாய் உடனடியாக மயங்கி விழுந்ததோடு இரத்தவாந்தியும் எடுத்தார். இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)