Advertisment

சென்னையில் உணவுத் திருவிழா 

Food festival in Chennai

சென்னையில் வரும் 16 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் வரும் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் சிறு தானிய வகை உணவுகள், பாரம்பரிய நெல் வகைகள் குறித்த அரங்குகள் இடம் பெற உள்ளன. இந்த உணவுத் திருவிழா தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற உள்ளது.

Chennai Kalaignar100
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe