Advertisment
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்த நிலையில் இன்றுமுதல் (20.09.2021) மீண்டும் பொதுமக்களுக்கு கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவங்கினர். அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.