Skip to main content

ஆதரவற்றோர்களுக்கு உணவு, 'மாஸ்க்' வழங்கி அசத்திய காவல்துறையினர்!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஆதரவற்றோர்களுக்கு காவல்துறையினர் தங்களின் சொந்த செலவில் உணவுகளை வழங்கி வருகின்றனர். 
 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டம் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால், தர்கா அருகே சாலையோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் உணவு இல்லமால் தவித்தனர். இதனை அறிந்த நாகூர் காவல்துறையினர், அங்கிருந்த 50- க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கினர். அதற்கு முன்னதாக, அவர்களை சோப்பால் கைகழுவ சொல்லியும், இலவசமாக 'மாஸ்க்' கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

food and mask provide police nagore

"நாகூரை போலவே நாகையில் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்று சாலையோரங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நியாயம் கேட்க வந்தவரை பூட்சால் உதைத்த நாகூர் எஸ்ஐ; நாகையில் பரபரப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Nagor S.I palanivel who kicked the person who came to seek justice

 

நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறையினர் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து, பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு உண்டாக்கியுள்ளது.

 

தமிழக எல்லையான நாகை அடுத்துள்ள நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரு வாகனங்கள் வளைய முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

 

நேற்று இரவு கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் வெகுநேரம் சிரமப்பட்டதையடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கியதோடு ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை கடுமையாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல் வாகனத்தில் ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த சக காவலர்கள் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் எஸ.ஐ பழனிவேல்  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

அரசு பேருந்து எளிமையாக செல்லும் வகையில் காவல் தடுப்புகளை அகற்ற வலியுறுத்திய நபரை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

சந்தனக்கூடு திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

ar rahman at santhanakoodu festival

 

சென்னை அண்ணா சாலையில் ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றும் விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் நேற்று இரவு கலந்து கொண்டனர். 

 

இதனையடுத்து அங்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. பின்பு அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மற்ற மதத்தை சார்ந்தவர்களும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.