Food allergy 4 people lost their lives  nursing home thenkasi

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 11 முதியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அதிகாரி புஷ்பராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார்.

முதியோர் இல்லத்தில் உபயோகிக்கப்பட்ட உணவின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, முதியோர் இல்லத்தில் உள்ள சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், காப்பக உரிமையாளரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 1 முதியவர் இன்று (13-06-25) பலியாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்ற்கிடையில், முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தபின் வருவாய்த் துறை அதிகாரிகள், இல்லத்திற்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.