பிடிவாரண்ட்டை தொடர்ந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் திருமா ஆஜர்!

thiruma

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பழைய வழக்கு ஒன்றுக்காக ஆஜராகினார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி மதமாற்ற தடைச்சட்டத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த பேரணியை விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

போலீசார் அனுமதி வழங்காத பகுதியில் தடையை மீறி சென்றதால், போலீசாருக்கும் பேரணியில் சென்றவர்களுக்கும் தள்ளுமுள்ளானது, பிறகு கலவரமாகி போலிசார் தடியடி நடத்தினர். விசிகவினர்கள், கட்டைகளை கொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

கலவரத்தில் காவல்துறையினர் சிலருக்கும், விசிகவினர் பலருக்கும் காயம் ஏற்பட்டது. அரசு பேருந்துகள், தனியார் வேன், கார் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

அப்போது மயிலாடுதுறை காவல் ஆய்வாளராக இருந்த அமிர்தகுமார் உள்ளிட்ட 4 பேர் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

thiruma

இந்தநிலையில் வழக்கு குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த பிப்ரவரி 16ம் தேதி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரு.செல்லப்பாண்டியன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

அதனை தொடரந்து இன்று 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினார் திருமாவளவன். வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியிருப்பதால், வழக்கை நாகப்பட்டினம் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி அறிவித்தார் நீதிபதி செல்லப்பாண்டியன்.

திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து அக்கட்சியினர் திரண்டிருந்தனர். அதற்கு நிகராக போலீசாரும் ஏராளமாக குவித்திருந்தனர்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe