Following the increase in the price of ghee, the price of butter also increased

கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்தான அறிவிப்பில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32-லிருந்து ரூபாய் 35-ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41-லிருந்து ரூபாய் 44-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.

Advertisment

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு பாக்கெட்) லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60-ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisment

தற்போது பாலின் விலையைத் தொடர்ந்து நெய்யின் விலையும்நேற்று (டிச.16)உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் நெய் ரூ. 580-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 50 ரூபாய் உயர்ந்து ரூ.630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லி. இதற்கு முன் ரூ.290 ஆக விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி. ரூ.130 இல் இருந்து ரூ.145-க்கும், 100 மி.லி. ரூ.70 இல் இருந்து ரூ75-க்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு டிச. 16 முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆவின் பால் மற்றும் நெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தியது ஆவின் நிர்வாகம்; சமையலுக்கான 500 கிராம் வெண்ணெய் ரூ.255லிருந்து ரூ.265ஆகவும் 100 கிராம் வெண்ணெய் ரூ.52 ல் இருந்து ரூ.55 ஆகவும் விலை உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது.உப்பு கலந்த 500 கிராம் வெண்ணெய் ரூ.250லிருந்து 260ஆகவும் உயரத்தப்பட்டுள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ52-ல் இருந்து ரூ.55 ஆக உயற்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விலை உயர்வு இன்றிலிருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment