vel tech

சென்னை ஆவடியிலுள்ள வேல் டெக் தனியார் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையில் ‘ஃபோகஸ்’ என்ற மாணவர்களுக்கான ஊடகச் சங்கத்தை ஃபிப்ரவரி 4ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் தொடங்க இருக்கின்றனர். இந்த தொடக்க விழாவில் திரைப்படத் துறையை சேர்ந்த திரு. கௌஷிக் நரசிம்ஹன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் இந்த விழாவில் வேல் டெக் கல்லூரியின் வேந்தர் டாக்டர். ஆர், ரங்கராஜன் மற்றும் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

கல்வி நிறுவனத்திற்கும் திரைதுறைக்கும் இருக்கின்ற இடைவெளியை நெருக்கமாக்குவதற்கு ஒரு பாலமாக அமைய ஃபோகஸ் எனும் மாணவர்களுக்கான ஊடகச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொழில் வல்லுநர்கள், பட்டறைகள், களப்பணியாளர்கள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்த உதவுகிறது. ஊடகத்திற்குள் நுழைய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் இளைய தலைமுறையினருக்கு திறமைகளை வளர்த்துகொள்ள உதவுவதே இச்சங்கத்தின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Advertisment