flying squad confiscated RS 3 lakh

நகர்ப்புறத் தேர்தல் விதி முறைகள் நடைமுறைக்கு வந்த கடந்த ஒரு வாரத்தில் திட்டக்குடி பகுதியில் மட்டும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பெண்ணாடம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி சோதனை செய்தனர். அவர் 3 லட்சத்தி 37 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவர் திட்டக்குடி அருகே உள்ள பனையாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரது மகன் 33 வயது இளவரசன் என்பதும், இவர் கொரக்கவாடி என்ற கிராமத்தில் ஏஜென்சி டிரேடர்ஸ் என்ற கடையில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இந்த பணம் முழுவதையும் கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், பெண்ணாடம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சண்முகவேலுவிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment