சோதனையில் சிக்கிய 3.5 லட்சம் பணம்... பறக்கும் படை அதிரடி!

 Flying Force Action 3.5 lakh cash caught in the test

தமிழக சட்டமன்றத்தின்16வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை,கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலர்களான, மாவட்ட ஆட்சியர்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளனர். இவர்கள் தொகுதி மக்களுக்கு வழங்க பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுப்பது, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு செல்வது, தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கண்காணிக்க பறக்கும்படை, கண்காணிப்புக் குழுக்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளன.

வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலமேலுமங்காபுரம் என்ற பகுதியில், மார்ச் 3 ஆம் தேதி நிலைக் கண்காணிப்புக் குழு, கணேசன் என்பவரின் தலைமையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் மதியம் 12 மணிக்கு இருவர் வந்துள்ளனர். அவர்களை மடக்கி சோதனையிட்டபோது 3,50,000 ரூபாய் பணம் இருந்துள்ளன. அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தைவேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதைவேலூர் சார் கருவூலத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களைக்கொடுத்துவிட்டு பணத்தைதிரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

flying squad team Vellore
இதையும் படியுங்கள்
Subscribe