Advertisment

தடை உத்தரவு நேரத்திலும் பறக்கும் கார்கள்-உயிருக்கு பயப்படும் வாகன ஓட்டிகள்!!

 Flying cars - motorists during prohibition

Advertisment

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள் தவிர அனைத்து வாகன பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களும் தங்கள் பகுதியில் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் செல்ல பயன்படுத்தலாம், மீறி வெளியே சுற்ற பயன்படுத்தினால் வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை.

இந்நிலையில் வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம் செல்ல முறையான அனுமதி பெற்று கார்களில் செல்ல அரசு அனுமதி தந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு பல வாகனங்கள் அனுமதி பெற்று பயணமாகின்றன. அதேநேரத்தில் உள்ளுரை சேர்ந்த பலர் பந்தாவாக காரை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்க வருகின்றனர். அவர்கள் வருவது ஒருப்பக்கம்மென்றால் சாலைகள் வாகனபோக்குவரத்து இல்லாமல் காலியாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கின்றனர்.

 Flying cars - motorists during prohibition

Advertisment

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் பழைய காட்பாடி பகுதியை சேர்ந்த 70 வயதான மணி, 65 வயதான வள்ளி இருவரும் மே 7ந்தேதி காலை தங்களது இருசக்கர வாகனத்தில் மருந்துவமனைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சென்றது.

இதனைப்பாத்துவிட்டு சாலையில் சென்ற சிலர் ஓடிவந்து அவர்களை தூக்கி உட்காரவைத்து முதலுதவி செய்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

accident corona virus vehicles Vellore
இதையும் படியுங்கள்
Subscribe