ADVERTISEMENT

மலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்... லீலா பேலஸ் வந்தடைந்தார் ரஜினிகாந்த்! (படங்கள் )

10:26 AM Mar 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றிய முக்கிய முடிவுகளை இன்று ரஜினிகாந்த் ஊடங்கங்களை சந்தித்து அறிவிக்க இருக்கிறார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று காலை முதல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் குழுமினர். அப்பொழுது சில நிர்வாகிகள் கட்சி ஆரம்பித்தால் ரஜினிகாந்த் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்பொழுது அவரது ரசிகர்கள் அவரது கார் மீது பூக்கள் தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர். லீலா பேலஸ் வந்தடைந்தார் ரஜினிகாந்த்.

அந்தச் சந்திப்பில் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT