Advertisment

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு ஏப்ரல் 26- ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. முழு ஊரடங்கின் சென்னையின் முக்கியச் சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் காற்று மாசும் வெகுவாகக் குறைந்துவருகிறது. சென்னையின் சாலைகளுக்கு நடுவே மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகள் பொதுவாக வாகன நெரிசல் காரணமாகப் புழுதி படிந்து காணப்படும். ஆனால், தற்போது வாகனப் போக்குவரத்து இல்லாததாலும் மாசு குறைந்துள்ளதாலும் தூய்மையாகவும் செழிப்பாகவும் காணப்படுகின்றன.