Flower path? The Lion Path? '- Poster in Public Name

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்ததைத் தொடர்ந்து அண்மையில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கை குறித்து தனது விளக்கத்தைசமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,அந்த அறிக்கை தன்னுடையது அல்ல எனவும், ஆனால் அந்த அறிக்கையில் தனது உடல்நிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானது எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் பொதுமக்கள் பெயரில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என 'பூ பாதையா? சிங்கபாதையா? மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கழுகு கூட்டத்தையும், ஓநாய் கூட்டத்தையும் வேட்டையாட சிங்க பாதையில் தான் செல்ல வேண்டும். எங்க ஓட்டு ரஜினி ஒருவருக்கே' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

Advertisment