
கடலூர் மாவட்டம்,புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்ல பிள்ளையார் கோவில் தெரு, காமராஜர் நகர் ஆகிய தெருக்களில் மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் தெருக்களில் குளம் போல் நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், கிளை செயலாளர் கார்த்திகேயன். கட்சியினர் சந்திரசேகர், விஜயராஜ், ராமலிங்கம், கருணாநிதி, சித்தேஸ்வரன், மாணிக்கம் மற்றும் 30 க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி, பேரூராட்சி அலுவலர்கள் உடனடியாக தெருக்களில் உள்ள மழை நீரை வடிய வைக்கிறோம் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.