கோவை மாவட்டம், வால்பாறையில் வரலாறு கானாத மழை பெய்தது. கனமழை காரணமாக அரசு பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்ததால் டீசல் டேங்க் மூழ்கியது. டீசல் இல்லாததால் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையை அடுத்த மானாம்பள்ளியில் காட்டாற்று வெள்ளத்தில் வேளாங்கண்ணி என்ற பெண் வயது (41) அடித்து செல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.