பம்பையில் வெள்ளப்பெருக்கு- பக்தர்களுக்கு எச்சரிக்கை

nn

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் பொழிந்து வரும் தொடர் மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் பம்பை ஆற்றை ஒட்டி சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் குறிப்பிட்ட பகுதியில் நிற்க வேண்டாம்.

மின்சார கம்பங்களை தொட வேண்டாம் என்று பல்வேறு அறிவிப்புகளை பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது . இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மிகக் கவனத்தோடு சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் மழைக்காலம் என்பதால் எந்த விதமான ஆபத்து ஏற்படலாம் என்பதால் கூடுதல் கவனத்துடன் பக்தர்கள் இருக்கும்படி சபரிமலை கோவில் நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

flood Kerala weather
இதையும் படியுங்கள்
Subscribe