/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2980.jpg)
காவிரி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகம் காரணமாக பிச்சாண்டார் கோவில், நொச்சியம், பெருகமணி நீர்நிலைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டனர். அந்தவகையில், அவர்கள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என். நேரு, மக்களுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும் இம்மக்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கிட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)