Skip to main content

ஊரை சுற்றி வெள்ளம் - திருச்சியில் குடிநீர் நிறுத்தம்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
t

 

திருச்சி மாவட்டத்தை சுற்றிலும் உள்ள நீர் பரப்புகளில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கரை புரண்டு வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திருச்சி மாநகரில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்பது பொதுமக்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அல்லாடிக்கொண்டிக்கிறார்கள்.


திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் கம்பரசம்பேட்டை தலைமை நீர்பணி நிலையம், டர்பைன் நீர்பணி நிலையம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் இயக்கப்பட்டு வரும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டம், புத்தாபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை தற்போது காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நீரில் மூழ்கி உள்ளது.

இதே நேரத்தில் ஸ்ரீரங்கம், கொள்ளிடம் கூட்டு குடிநீர் பாலம் இடிந்து தொங்குவதால் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது.. திருவெறும்பூர், கூத்தைப்பார், BHEL, துவாக்குடி ஆகிய பகுதிகளுக்கு மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன் ஆழ்துளை கிணறுகள், வடிநீர் கிணறுகள் மற்றும் பிரதான உந்து குழாய் தாங்கும் பாலம் ஆகியவை பழுதடைந்து இயக்க இயலாத நிலையில் உள்ளது. எனவே தலைமை நீர்பணி நிலையத்தில் அடங்கும், மரக்கடை, விறகுபேட்டை பகுதிகள், டர்பைன் நீர்பணி நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை, சிந்தாமணி பகுதிகள், பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயநகர், மற்றும் பிராட்டியூர் காவேரிநகர், புத்தாபுரம் மற்றும் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்டங்களில் அடங்கும் வார்டு எண்.61,62,63,64,65 க்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நீர் வடியும் வரை குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் இருக்காது. மேற்கண்ட பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்