தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளதிருமூர்த்திமலையில்உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிவாரத்தில் உள்ளதிருமூர்த்தி அருவியின்நீர்பிடிப்புபகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் அருவிக்குச்செல்வதற்கானதரைப்பாலம் மூழ்கியுள்ளது.
இதனால் அந்தபகுதியில் உள்ளஅருவிக்குச் செல்லசுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமணலிங்கேஷ்வரர் கோவிலிலிருந்து மதியமே பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமணலிங்கேஷ்வரர் கோவில் மற்றும் அருவி உள்ளபகுதிக்குச்சுற்றலா பயணிகள் செல்லாவண்ணம் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.