Advertisment

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அதிகளவு மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தாம்பரம் அடுத்துள்ள அன்னைஅஞ்சுகம் நகரை முழுவதுமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்தும் மழைநீர் வடியாததால் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் புறச்சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.