Advertisment

திண்டுக்கல்லில் வி.ஐ.பி.கள் கொடுக்கும் வெள்ள நிவாரண நிதி!

coll

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அரசும் முயன்ற உதவிகளை செய்து வருகிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளவுக்கு மருத்துவ பொருட்களும் அத்தியாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தநிலையில் தான் திண்டுக்கல்லில் உள்ள வர்த்தக சங்கம், ரோட்டரிகிளப், லயன்ஸ்கிளப் உள்பட சில சங்கங்கள் மூலமாக 25 லட்சத்திற்கான அரசி, பருப்பு, எண்ணெய், குடிதண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளுக்கு பால்பவடர், கம்பிளி, வேஷ்டி, சுடிதர், சேலை, துண்டு, தட்டு, பிஸ்கட், பேனா, பென்சில், குளுகோஸ் உள்பட நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டது.

Advertisment

coll

இப்படி வாங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நான்கு லாரிகளில் கேரளாவுக்கு ஏற்றப்பட்டது. அதை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் வினைய் ஆகியோர் கொடி அசைத்து அந்த வானங்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் மாவட்ட கலெக்டர் வினைய் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது...

மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களும் முக்கிய விஐ.பி.களும் முடிந்த உதவிகள் செய்ய முன் வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதை தொடந்து தான் தரணிகுழு உரிமையாளரும் தொழில் அதிபருமான ரெத்தினம், கேரளா வெள்ள நிவாரண நிதியாக 7 லட்சத்திற்கான செக்கை மாவட்ட கலெக்டர் வினைய்யிடம் கொடுத்தார்.

அதுபோல் வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ் ஆகியோர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சத்திற்கான செக்கை மாவட்ட கலெக்டர் வினைய்யிடம் வழங்கினார்கள். அது போல் சாகர் மெடிக்கல் உரிமையாளர் நாசர்கானும் கேரள மக்களுக்கு 5 லட்சத்திற்கான காசோலயை கலெக்டரிடம் வழங்கினார். அதைதொடர்ந்து அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட சில விஐ.பி.களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண நிதிகள் வழங்கி வருகிறார்கள்.

kerala flood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe