Advertisment

அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

amarvathi dam

Advertisment

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி,கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோவையில் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Advertisment

இதையடுத்து, அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில்உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், அங்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 4,860 கனஅடி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில்,மொத்தம் 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 85.01 அடியாக உள்ளது.

அதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளநிலையில், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 15.6 சென்டி மீட்டர் மழையும், பந்தலூர் 15சென்டி மீட்டர், நடுவட்டம் 13.7சென்டி மீட்டர், மேல் பவானி 13சென்டி மீட்டர்,கிளன்மார்கன் 11.6சென்டி மீட்டர், எம்ரால்டு9.3சென்டி மீட்டர், கூடலூர் 8.5 சென்டி மீட்டர்,மேல்கூடலூர்8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

amaravati dam thirupur weather
இதையும் படியுங்கள்
Subscribe