செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடந்த பருவ மழையின் போது இந்தப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெள்ள நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர். அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ.75 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகளானது தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.