Advertisment

வந்த வெள்ளம்; வராத அதிகாரிகள்

 the flood that came; Absentee officers; People crossing without realizing the danger

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், நெல்லையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரின் ஆபத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதில்கடந்து சென்று வருகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Advertisment

திருநெல்வேலியில் இரவு முழுக்க பெய்த கனமழை காரணமாக மானூர் அருகே உள்ள மேல இலந்த குளம் பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடிக்கும் வகையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும் கடந்து சென்று வருகிறது. சிலர் ஆபத்தை உணராமல் நடந்தே வெள்ளத்தை கடந்து வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisment

flood nellai weather
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe