சென்னை விமான நிலையத்தில் இருந்து 145 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் விமானத்தில் எரிபொருள் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் எரிபொருள் கசிவைச் சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இத்தகவல் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகச் சென்னையில் இருந்து ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் அவதியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.