சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2ee831432b978b530d213cb7fda673f711111.jpg)
அந்த மனுவில் இழப்பீடு கோரி சம்மந்தப்பட்டவர்களிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை எனவும், சுபஸ்ரீ மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் .அதே போல் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று சுபஸ்ரீயின் தந்தை ரவி கோரிக்கை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)