
தமிழக பா.ஜ.க சார்பில், நேற்றுபிரதமர் மோடியின்70 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,மதுரவாயல்ஏரிக்கரை பகுதியில் 70 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.
இதனைத் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் கொடியேற்றி திறந்து வைத்தார். இந்நிலையில், நள்ளிரவில் இந்தக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கொடிக் கம்பம்நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு உயரக் கொடிக்கம்பம் ஆபத்து எனவும் கூறப்பட்டு நள்ளிரவில்கம்பம்அகற்றப்பட்டது.
இதனையடுத்து, மதுரவாயலில் கொடிக்கம்பம் அகற்றப்படபகுதியில் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)