Advertisment

உற்சாகத்துடன் புறப்பட்ட கொடிப் பயண குழுவினர்

Flag expedition crew set off with enthusiasm

வீடு,கல்வி,மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13 வது மாநில மாநாடு ஜூலை 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அந்த மாநில மாநாட்டின் கலந்து கொள்வதற்காக கொடி பயணம் தொடர்ந்தது. இதற்காக மாநில நிர்வாக குழு உறுப்பினர் கே.எஸ்.அப்பாவு தலைமையில் 20 பிரதிநிதிகளுடன் விழுப்புரத்தில் துவங்கி கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, ஆகிய மாவட்டங்களின் வழியாக விருதுநகர், வழியாக ராஜபாளையம் சென்றடைகிறது.

Advertisment

அங்கு செல்லும் வழியில் கொடி பயணம் வரவேற்பு கூட்டம் இன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மங்களூர் ஒன்றிய செயலாளர் எம் நிதிஉலகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர் சுப்பிரமணியன்,நல்லூர் ஒன்றிய செயலாளர் வி பி முருகையன்,ஒன்றிய துணை செயலாளர் ஆர் தேவா,மாவட்ட குழு கடவுள் (எ)கோவிந்தராசு,நகர செயலாளர் கே.செல்வராசு மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாஷ்,தங்கராசு,ரவி உட்பட சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.கொடி பயண குழுவினர் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.

Advertisment

politics rally
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe