Skip to main content

பண்ருட்டி அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் போராட்டம்!

Published on 31/12/2018 | Edited on 01/01/2019
f

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி கடந்த 13 ஆண்டுகளாக இயங்கியது. பின்னர்  போதிய மணல் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக குவாரி மூடப்பட்டது.


இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி மணல் குவாரி இயங்க தொடங்கியது. அங்கிருந்து அள்ளப்படும் மணல்  லாரிகள் மூலம் பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஏரிப்பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

f

 

மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் அந்த குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கும் மேலாக மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.  ஆனால்  மீண்டும் 24-ஆம் தேதி முதல் குவாரியில் மணல் அள்ளும் பணி துவங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

f

 

இந்நிலையில் தி.மு.க கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க,  த.வா.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க,  வி.சி.உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இன்று எனதிரிமங்கலத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முழுக்கங்கள் எழுப்பினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமன் கொடி அகற்றம்; பதற்றத்தில் கர்நாடகா!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Karnataka in tension on Removal of Hanuman flag

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கிராம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் 108 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்து, அதில் அனுமன் கொடி ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, எந்த மத, அரசியல் கொடியையும் ஏற்றக்கூடாது என்று கூறி கிராமப் பஞ்சாயத்து அந்த கோரிக்கை நிராகரித்தது.

இருப்பினும், அந்த கிராம மக்கள் சிலரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து, அந்த அரசு நிலத்தில் கொடிக் கம்பம் அமைத்து அதில் அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதையறிந்த, மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் அனுமன் கொடியை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று (28-01-24) அந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். 

இருப்பினும், போராட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதன் பின்னர், அங்கு இருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். இதற்கு இந்து அமைப்பினரும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது தற்செயலாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே விதிகளை மீறி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் தான். கர்நாடகா மக்களை மாநில அரசுக்கு எதிராகத் திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார். 

Next Story

“விஷப் பரீட்சைக்குள் காவல்துறை வரவேண்டாம்” - அண்ணாமலை

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Annamalai criticized police department for flagpole

 

சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. 

 

இதனையடுத்து, இந்த சம்பவத்தைக் கண்டித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக  கொடிக்கம்பங்கள் என 1000 கொடிக்கம்பங்கள் நடப்படும்” என்று அறிவித்தார். அதன்படி, நேற்று (01-11-23) தமிழகம் முழுவதும் 1400 இடங்களில் பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடுவதற்கு பா.ஜ.க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

அந்த வகையில், கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையத்தில் பா.ஜ.க கட்சியினர் அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று காலை கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பா.ஜ.க கட்சியினர் திரண்டு வந்து கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீஸார், அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நடக்கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, பாலாஜி உத்தம ராமசாமி, துணைத் தலைவர் கனக சபாபதி உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

 

அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராகிம் உள்பட 11 பேரையும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்டத் தலைவர் தனபாலன் உள்பட 75 பேரையும் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நட முயன்றதாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், பழனி என மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி கொடியேற்றியதாகவும், கொடிக்கம்பங்களை நட முயன்றதாகவும் ஏராளமான பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒருவர் தனது சொந்த இடத்தில் கொடிக்கம்பத்தை வைப்பதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. வீட்டில் கொடிக் கம்பத்தை ஏற்றியவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த கொடிக் கம்பத்தை அகற்றி அருகில் புதிய கொடிக் கம்பத்தை வைத்தால் அதையும் தடுக்கிறார்கள். காவல்துறைக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால், காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி கொடிக் கம்பத்தை அகற்றுகின்றனர். தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே தான் போட்டி. இந்த விஷ பரீட்சைக்குள் காவல்துறை வரவேண்டாம்” என்று கூறினார்.