Skip to main content

அரசு கேபிள் டிவிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம்: TDSAT உத்தரவு: இதுவே முதல்முறை...

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

 

மதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் கடந்த மாதம் 11 ம் தேதி சத்தியம் டிவியில் விவாத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அன்று இரவே அதனுடைய ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

 

Government Cable TV



இந்த விஷயத்தை சத்தியம் டிவியின் நேயர்கள் 3 பேர் TDSAT எனப்படும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் வழக்காக தொடர்ந்தனர். அதன் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பொரேஷனுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்தில் அரசு கேபிள் டிவியின் மீது வழக்கு தொடர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு அந்த தொகையை தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு TDSAT அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 TV comedy actor Kovai Guna passed away

 

'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட பல  தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மூலம் பிரபலமானவர் கோவை குணா. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கோவையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவுக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.