Published on 13/03/2019 | Edited on 13/03/2019

கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்தது. அதை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர்.
போலீசார் நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டிவந்த வாலிபர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்தனர். அந்த காரில் 25 மூட்டையில் 500 லிட்டர் சாராயம் குளிர்பான பாக்கெட்டுகள் போல் 5000 பாக்கெட்டுகள் இருந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய விலாங்கு என்கின்ற நடராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.