தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை வாகன சோதனையின் போது கருத்தம்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Advertisment

Five suspects arrested near kovai

கோவை மாவட்டம் கருத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் கருத்தம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் சந்தேகப்படும்படியாக வந்த சரவணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கமலக்கண்ணன், கோபாலகிருஷ்ணன், சந்தோஷ்குமார், பாண்டீஸ்வரன் ஆகியோர்களுடன் சேர்ந்து இவர் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் கமலக்கண்ணன், சரண், கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் குமார் ஆகியோர் வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.