பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக கிஷன் ரெட்டி நியமனம்!

five state assembly election bjp leaders appointed

பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களில்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

five state assembly election bjp leaders appointed

இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணைப் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்-கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கேரள மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அசாம் மாநிலத்திற்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Assembly election leaders Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe