/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-21_61.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியைச்சேர்ந்தவர் தமிழரசன் (34). இவர் மேஸ்திரியாக இருந்துவந்தார். இவரது சொந்த ஊரான கைலாசகிரி பகுதியில் கெங்கை அம்மன் திருவிழாவிற்குதனது நண்பர் உமர் என்பவரின் காரில் தனது நண்பர்களானராசய்யா(28),ரஞ்சித்(25), அருண்(25), பிரபு(28) ஆகியோர் கைலாசகிரியில் இருந்து கார் மூலம் பகுதிக்கு பூஜை பொருட்கள்வாங்குவதற்காக பேரணாம்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரைதமிழரசன் ஓட்டி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் பாலூர் அருகே கார் ஓட்டுநரின்கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே காரை ஓட்டிவந்த தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள உமரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)