Five people traveling in a two-wheeler; tragic accident near Thittakudi

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேஇருசக்கர வாகனம் ஒன்றில்ஐந்து பேர் சென்ற நிலையில் லாரி மோதிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் பேருந்து நிறுத்தம் அருகே அரியலூர் மாவட்டம் இருங்கலாக்குறிச்சிகிராமத்தைச் சேர்ந்த கோபி, செல்வி, சிறுவர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அருகே உள்ள பூமாலையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐந்து பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது எதிரே வந்த லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.