விஷம் குடித்து குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய மக்கள்..

Five passes away in family madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.கே. தெருவில் வசித்துவருபவர் சரவணன் (35). இவர் இன்று (11.05.2021) தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் ஆர்.கே. தெருவில் வசித்துவருபவர் சரவணன். இவர், நகைக்கடை தெருவில் நகைபட்டறை செய்யும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், கரோனா முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடன் தொல்லையால் குடும்பத்துடன் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இவரது மனைவி விஜி (24), மகள் அபி (5), மகாலட்சுமி (10), மகன் அமுதன் (6) ஆகிய ஐந்து பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். உடல்களைக் கைப்பற்றி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தற்கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

corona virus madurai
இதையும் படியுங்கள்
Subscribe