Five months pregnant woman who tried to commit - Police investigation

Advertisment

அரியலூரில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவர்தண்ணீரில் விளையாடிய குழந்தையை அடித்ததால் மாமனார், மாமியார் கர்ப்பிணி பெண்ணை திட்டியிருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த அந்தப்பெண் மாமனார்,மாமியார் தாக்கியதை அவரது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவரும் அதைக் கண்டித்து கர்ப்பிணி பெண்ணைத்தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.