Advertisment

சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

nn

Advertisment

நாளை ஜனவரி 26 இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர வாகன தணிக்கைமற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியரசு தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் மாநில எல்லைகளில் தீவிர வாகன கண்காணிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை குடியரசு மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியரசு தின விழா நடைபெறும் சென்னை காமராஜர் சாலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் தீவிரமாகக் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்றும் நாளையும் ட்ரோன்களை பறக்க தடை விதித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Republic President Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe