Five kg bit paper seized ... Warning to Xerox stores!

10 , 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ பிட் பேப்பர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் 05/05/2022 ஆம் தேதி தொடங்கிய 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 06/05/2022 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு முன்னரே பள்ளி தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும், தேர்வில் காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் உள்ளிட்ட தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களின் தன்மைகள், அதற்கான தண்டனை அளவு உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்தது.

Advertisment

Five kg bit paper seized ... Warning to Xerox stores!

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவிற்கு காப்பி அடிக்க பயன்படுத்தப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பாடப்புத்தகங்களை சிறிய அளவில் சுருக்கி மைக்ரோ பிட் பேப்பர்களை தயாரித்த ஜெராக்ஸ் கடைக்காரர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.