Advertisment

இளைஞர் மரணம்: கைதான ஐந்து நண்பர்கள்!

 Five friends arrested

Advertisment

திருச்சி மாவட்டம்கோட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் நரசிம்மன் (19). இவர் கடந்த 27ஆம் தேதி தனது நண்பர்களோடு காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர்களான பிரபு, கோபி, பழனிச்சாமி, சதீஷ்குமார், சந்துரு ஆகிய ஐந்து பேருடன் நரசிம்மனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த நரசிம்மன், செப்டம்பர் 1ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நரசிம்மனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், செப்டம்பர் 3ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நரசிம்மனின் தாய், நரசிம்மனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து தற்கொலைக்குக் காரணமான நண்பர்கள் ஐந்து பேரையும் கைது செய்ய வலியுறுத்தினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், நரசிம்மனின் நண்பர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

incident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe