Advertisment

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் கைது! 

Five fishermen of Pudukottai district arrested!

Advertisment

புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்கள் உள்பட இரண்டு நாட்களில் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களை வரும் ஜூலை 8- ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டியதாகக் கூறி ஐந்து பேரை கைது செய்தனர்.

pudukkottai srilanka
இதையும் படியுங்கள்
Subscribe