Skip to main content

'ஐந்து மாநகராட்சிகளில் பிற்பகல் மூன்று மணிவரை கடைகள் திறந்திருக்கலாம்'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. 

 


அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் சில இடங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை (26/04/2020) காலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

five corporation areas shops opening times extension cm palanisamy announced


நாளை முதல் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், காய்கறி மார்க்கெட், மளிகை, இறைச்சிக் கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். இதனால் இன்று கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

 

http://onelink.to/nknapp


இந்த நிலையில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் இன்று மட்டும் பிற்பகல் 03.00 மணிவரை கடைகள் திறந்திருக்கலாம் சென்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறி, மளிகைக்கடைகள் இன்று பிற்பகல் மூன்று மணிவரை செயல்படும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கடைகள் திறந்திருக்கலாம். மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளைத் திறந்திருக்கலாம். மக்கள் பொருட்களை வாங்கச் செல்லும்போது தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்." இவ்வாறு முதல்வர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வழக்கமாகப் பகல் 1 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியுள்ள நிலையில், இன்று ஒருநாள் மட்டும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்