Skip to main content

துவங்கியது இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு! (படங்கள்)

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

 

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றன.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

நீண்ட காலம் யார் தான் வாழ்கிறார்கள்? - டாக்டர் சசிகுமார் குருநாதன் விளக்கம் !

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
 Dr SasiKumar Gurunathan Interview

முந்தைய காலங்களில் இருந்தவர்கள் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்பொழுது உள்ளவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இது மருத்துவக் கூற்றின்படி எந்த அளவிற்கு உண்மை என்ற நம் கேள்விக்கு பிரபல முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் பதிலளிக்கிறார்.

முந்தைய காலங்களில் உள்ளவர்களை விட இப்போது இருப்பவர்கள் வாழும் காலம் என்பது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் வாழும் ஆண்டுகள் 40 முதல் 60 வயதிற்குள் முடிந்து விடும். ஆனால் இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக 70 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள். நம்முடைய வாழ்வியலில் மாற்றங்கள் இருப்பினும், இப்பொழுது மருத்துவம், அறிவியல் எல்லாம் அடுத்தகட்டத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் இப்பொழுது சிறப்பானதொரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முந்தைய காலங்களில் கேன்சர் போன்ற நோய்களுக்கெல்லாம் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வந்தாலே இறந்துவிடுவார்கள் என்ற சூழல்தான் நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது எல்லா நோய்களுக்குமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இறப்பின் அளவு குறைந்திருக்கிறது. நோய்களை குணப்படுத்த முடியும், கட்டுக்குள் வைக்க முடியும். 

வெளிநாடுகளில் வயதாகி விட்டாலே தனக்கென்று ஒரு மருத்துவரை அடிக்கடி அணுகி நோய் எதாவது இருக்கிறதா? உணவில், வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நம் நாட்டில் வயதானவர்கள் பலர் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டேன். வேறு மருத்துவமுறையை அணுகி நோயை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று செல்வதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் மாற்று மருத்துவ மருந்துகளை ஒரு எக்ஸ்ட்ரா காம்ப்ளிமெண்டரியாக எடுத்துக் கொள்வார்களே தவிர அதையே நம்பி இருக்கமாட்டார்கள். 

மாற்று மருத்துவத்தை நோக்கி போகிறவர்கள் அலோபதி மருந்துகளை கெமிக்கல் என்கிறார்கள். கெமிக்கல் என்று எதுவும் தனியாக வந்து விடுவதில்லை, இங்கிருக்கிற பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. அவைதான் மருந்து, மாத்திரை, ஊசிகளாக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுமில்லை. அவற்றை இப்போது கண்டறிந்து பயன்படுத்தப்படுவதால் இறப்பின் விகிதம் குறைந்து இப்பொழுது உள்ள மக்கள் தான் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.

The website encountered an unexpected error. Please try again later.