
தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது. அதனையடுத்து, இரண்டாம் கட்டமாக உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை கடந்த 26ஆம் தேதி ஆண்களுக்கு நடைபெற்ற நிலையில், இன்று (02.08.2021) பெண்களுக்கான உடல் தகுதித் தேர்வுநடைபெற்றது. அதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், 300 பெண்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் வெற்றிபெறும் பெண்கள் தீயணைப்பு, சிறைக் காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற இந்த தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு, திருச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
Follow Us